உலக தற்கொலை தடுப்பு தினம் செப்டம்பர் 10 2019 – விழிப்புணர்வு பேரணி

 In NEWS, NEWS & Events

SUICIDE PREVENTION DAY 2019 – RALLY

அறம் மருத்துவமனை சார்பாக,உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இந்த பேரணியில் பிஷப் ஹீபர் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.பிஷப் ஹீபர் கல்லூரியின் தற்கொலை தடுப்பு சங்கம்,மனித உரிமைகள் சங்கம்,நல்ல சமாரியன் இயக்கம்,போதைப்பொருள் தடுப்பு சங்கம் சேர்ந்த மாணவர்களும் மற்றும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.மேலும் இந்நிகழ்வில் பிஷப் ஹீபர் கல்லூரியின் முதல்வர் முனைவர் பால் தயாபரன் மற்றும் திருச்சி மண்டல தீயணைப்பு மற்றும் மீட்பு துறை காவல் அதிகாரி ஐயா திரு புளுகாண்டி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர் மேலும் அறம் மருத்துவமனையின் இயக்குனர் மற்றும் மனநல மருத்துவர் மகேஷ்ராஜகோபால் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் இணைந்து பேரணியை துவக்கி வைத்தனர்.இப்பேரணியானது திருச்சி கோர்ட் வளாகத்தில் இருந்து பிஷப் ஹீபர் கல்லூரி வரை நடைபெற்றது.300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.மேலும் தற்கொலை பற்றிய பதாகைகளும் மாணவர்களிடத்தில் கொடுக்கப்பட்டு அதனை பற்றிய வாசகங்கள் சத்தமாக உச்சரிக்கப்பட்டது.மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்வு நடைபெற்றது

WHO ஆய்வின் படி இந்தியாவின் சராசரியை விட தமிழ்நாட்டில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கைமூன்று மடங்கு அதிகம். National Crime Records Bureau (NCRB) படி.2015 -2018 ஆண்டில், 14,602 தற்கொலைகள் தமிழ்நாட்டில் நடந்துள்ளன. நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் நம் மாநிலம் இருந்தது. 2015 எண்ணிக்கையின் அடிப்படையில் 916 மாணவர்களும் 2673 குடும்பத்தலைவிகளும் தற்கொலை செய்துள்ளனர்.
இதில் சென்னை குறிப்பிடத்தக்க பங்கை வகித்துள்ளது. 2016 ஆம் ஆண்டில் 2270கும் அதிகமான தற்கொலைகள் நடந்துள்ளன. இது மொத்த மாநில எண்ணிக்கையில் பதினைந்து சதவிகிதம் ஆகும். தனக்குத்தானே துன்பம் விளைவித்துக் கொள்வதே இறப்புக்கு பிரதான காரணமாக நகர்புறத்தில் அமைகிறது.
State suicide prevention helpline – 104 (24 hours)

Recent Posts

Leave a Comment