அறம் மருத்துவமனை மற்றும் அழகப்பா பல்கலைக்கழகம் இனைந்து, R.T மலையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், Mobile Addiction என்ற தலைப்பில் 11/12/21 அன்று நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, அறம் மருத்துவமனையின் மனநல ஆலோசகர் செல்வி. ரதிப்ரியா அவர்கள் சிறப்புரை வழங்கினார். மேலும் அந்நிகழ்ச்சியில் அதீத கைபேசி பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகளை பற்றி, பள்ளி மாணவர்களுக்கு செல்வி. ரதிப்ரியா அவர்கள் தெளிவான விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதில் கீழ் குறிப்பிட்டுள்ள முக்கியமான தலைப்புகளை பற்றியும் பள்ளி மாணவர்களுக்கு விளக்கினார்.
1.கண் பார்வை கோளாறு (கண் எரிச்சல், கண்களில் நீர்வடிதல், மங்களான கண் பார்வை)
2.ஒற்றை தலை வலி
3.காது கோளாறு
4.நாள்பட்ட உடல் வலி
5.மன அழுத்தம் மற்றும் மனசோர்வு
6.சரும பிரச்சனைகள்
7.புற்றுநோய் பிரச்சனை
8. தனிமை உணர்வு
9.நினைவாற்றல் இழப்பு.
10.எதிர்மறை எண்ணங்கள் .
11. குடும்பம் மற்றும் சமூகத்தில் முறையான பங்களிப்பின்மை
12. குண கோளாறு மற்றும் நடத்தை கோளாறுகள்
13. அதீத கோவம் மற்றும் எரிச்சல் உணர்வு
14. விபத்துக்கள்
15. இதய பிரச்சனை
16. தொற்று வியாதி
17.செரிமான கோளாறு,
18. பசியின்மை
19. உடல் எடை அதிகரிப்பது அல்லது அதீத உடல் எடை குறைவு
20. வளர்ச்சிதை பிரச்சினைககள்
அதீத கை பேசி பயன்பாட்டினை தவிர்ப்பதற்கான வழிகள்:
1. கை பேசி பயன்பாட்டிற்காக குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி அந்த நேரத்தில் மட்டும் கைபேசி உபயோகிக்க வேண்டும்.
2. வெகு நேரம் தலையை கீழே குனிந்தவாறு கை பேசி பயன்படுத்துவதால் அதீத கழுத்து வலி ஏற்படுகிறது. ஆகையினால் கைபேசியை அதிக நேரம் உபயோகிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், Mobile Stand பயன்படுத்துவதன் மூலம் கழுவலியை தவிர்க்க முடியும்.
3. Head phone உபயோகிப்பதை முடிந்த வரை தவிர்க்க வேண்டும்.
4. இருள் சூழ்ந்த அறையில் கைபேசி பயன்படுத்துவதால் கண்கள் விரைவில் பாதிப்பு உள்ளாகிறது. ஆகையினால் இரவு நேரத்தில் கைபேசி பயன்படுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டால் மின்விளக்கை போட்டுகொண்டு கைபேசி உபயோகிக்க வேண்டும்.
5. நடந்து செல்லும்பொழுதோ அல்லது பேருந்தில் பயணம் செய்யும்பொழுதோ கைபேசி உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.
6. இரவு உறங்குவதற்கு குறைந்த பட்சம் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக கைபேசி உபயோகபடுத்துவதனால் விரைவில் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.