Travel Restrictions:
தற்போது உள்ள சூழலில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது மிகுந்த சிரமமாக உள்ளது. இதனால் நம் விருப்பம் போல நாம் விரும்பிய இடத்திற்கு சென்று வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. உதாரணமாக, திருமணம், இறப்பு போன்ற சுப மற்றும் துக்க நிகழ்ச்சிகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. வெளிநாட்டிலோ அல்லது வெளியூரிலோ வேலை பார்க்கும் பெரும்பாலானோர் இந்த திடீர் ஊரடங்கு உத்தரவினால் தன் சொந்த ஊருக்கு செல்ல முடியாததால் மனஉளைச்சலும், மனசோர்வும் அடைந்து விடுகின்றனர். சில நேரங்களில் இடம்பெயர்ந்து வருவதற்கான சூழல் ஏற்படும் போது, சொந்த ஊருக்கு செல்லும் நிலையில் அந்த புதிய சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்வதற்கும் பல இன்னல்கள் ஏற்படும்.
Work From Home:
இன்றைய சூழலில் பலர் வீட்டில் இருந்தே வேலை பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக IT துறையினரை கூறலாம். இவ்வாறாக வேலை செய்வதால் Personal Life, Work Life எது என்பதை பிரிந்து பார்ப்பதில் சிரமம் ஏற்படுகிறது. சில நேரங்கள் நிறுவனங்களில் ஆள் குறைப்பு நடவடிக்கையால் பணி சுமையும் அதிகரித்துள்ளது. இதனால் தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
Sleeping:
இன்றைய இந்த சூழ்நிலையின் காரணமாக பலரின் தூக்கம், உணவு முறைகளில் பல மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது உடல் மற்றும் மனநலத்தை பாதிக்கும்.
Hobbies:
உடற்பயிற்சி, கோவிலுக்கு செல்வது, Cinema, Park போன்ற பொழுது போக்கிற்கான பல அம்சங்கள் தற்போது அதிக அளவு தடைபட்டுள்ளதால் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நம் மனஅழுத்தம் அதிகரிக்க இது முதன்மை காரணமாக உள்ளது.
Hospital:
கொரோனா பெருந்தொற்று காரணமாக மருத்துவமனை செல்வதற்கு பொது மக்களிடையே பயம் ஏற்பட்டுள்ளது. பிற நோயாளிகளுக்கான சிகிச்சையின் முக்கியத்துவமும் குறைந்து, அதற்கான சிகிக்சை பெறுவதில் தடை ஏற்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக நாள்பட்ட நோய்களான நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய், இதயம் சம்பந்தப்பட்ட நோய், Dialysis. இதனால் உடல் மற்றும் மனரீதியான நோய்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மனநல சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிகிச்சை மற்றும் மருந்துகள் கிடைப்பதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் விரைவாக பரவி வரும் வேளையில் தங்களுக்கும் நோய் தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அதீத பயத்தால் சிலருக்கு மன பதற்றம், மனச்சோர்வு போன்றவைகள் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
Relationship:
Social Distance கடைபிடிக்க வேண்டிய நிலை இருப்பதால் நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்தித்து பேசுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் மனதில் உள்ள இன்ப, துன்பங்களை பகிர்ந்து கொள்ள முடியாத சூழல் இருப்பதால் மனஅழுத்தம் அதிகமாக உள்ளது. ஆனால் பெரும்பான்மையான குடும்பத்தினர் கிடைத்துள்ள இந்த பொன்னான நேரத்தை தமக்கு சாதகமாக மாற்றி மகிழ்ச்சியாக குடும்பத்துடன் செலவிடுகின்றனர். ஆனால் சில குடும்பங்களில் சண்டை, சச்சரவுகளும் ஒரே வீட்டில் அதிக காலங்கள் இருப்பதால் வன்முறை சம்பவங்களும் நடப்பதற்கு காரணமாக உள்ளது. உதாரணமாக, கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்று கொண்டிருந்ததால் குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் குறைவாக இருந்திருக்கும். தற்போது வேலையின்றி அதிகம் வீட்டிலேயே இருப்பதால் இருவருக்கும் இடையே புரிதல் பிரச்சனைகள், வாக்கு வாதம் ஏற்பட்டு ஒரு சில குடும்பங்களில் வன்முறை சம்பவங்களும் நடந்தேறுகிறது.
Shopping:
பெரும்பான்மையான இல்லத்தரசிகள் இந்த ஊரடங்கு உத்தரவினால் மிகுந்த மனபதற்றத்திற்கு ஆளாகி உள்ளனர். காரணம் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திடீரென்று விதிக்கப்பட்ட வழிமுறைகளை கடைபிடிப்பதற்கும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் Shopping Mall, Online Shopping போன்ற இடங்களில் பொருள் வாங்குவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் Shopping செல்வதையே பொழுது போக்காக கருதிக் கொண்டிருந்த சிலருக்கு அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும் சில நேரங்களில் வீட்டிற்குத்தேவையான உணவு பொருட்கள், மளிகை பொருட்கள், காய்கறிகள், பழங்கள், மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும் பல இன்னல்கள் ஏற்பட்டுள்ளது. எனவே இது போன்ற பிரச்சனைகள் வீட்டில் உள்ள சிறியவர் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கின்றது.
Mobile Addictions:
தற்போதைய சூழலில் பெரும்பான்மையான பொழுதுபோக்குகளான Cinema, Mall, Park, Beach, Tourist Place போன்ற இடங்கள் முடக்கப்பட்டுள்ள காரணத்தால் பொழுதுபோக்கிற்காக கைப்பேசியையே நாடி பலர் செல்கின்றனர். இது mobile addiction-க்கு காரணமாகிவிடுகிறது. Videos, Tik Tok போன்ற social Medias, Online Game, PUBG, Pornographic videos போன்றவைகளுக்கு அடிமையாகி உள்ளனர். இது இவர்களுக்கு மன அழுத்தம், மன பயம், தூக்கமின்மை போன்ற மனநலம் சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம் :
இந்த சூழ்நிலையில் குழந்தைகளை வளர்ப்பது மற்றும் வழி நடத்துவது போன்றவைகளில் பல சிக்கல் ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் ஓடி, ஆடி விளையாடும் வயதில் ஒரே இடத்தில அடைந்து கிடப்பது அவர்களின் வளர்ச்சியை பாதிக்கக்கூடும். பள்ளிக்கு செல்ல வேண்டிய காலத்தில் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கு உத்தரவு காலத்தில் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் Online வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஆனால் பல மாணவர்களுக்கு இணையதள வசதி இல்லாத காரணத்தினால் அவர்களுக்கு இந்த online வகுப்புகள் கிடைப்பது தடைப்பட்டு இருக்கின்றன. கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு தற்போது இறுதி தேர்வு முடியும் தருவாயில் ஊரடங்கினால் தேர்வுகள் எப்போது நடக்க போகிறது என்ற பயமும், குழப்பமும் ஏற்படுகிறது.