போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்வு – 2019

 In NEWS, NEWS & Events

அறம் மருத்துவமனை மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரியின் சார்பாக நேற்று திருச்சி R .C மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.இந்நிகழ்வில் மனநல மருத்துவர் மகேஷ் ராஜகோபால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களிடத்தில் கலந்துரையாடினார்.இந்த நிகழ்வில் எட்டாம் மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் கலந்துகொண்டனர்.காரணம் பதின்பருவத்தின் முதல் கட்டத்தில் இருப்பதால் தனக்கு ஏற்படும் மாறுதல்களையும் அதனை சரியான பாதையில் கொண்டு செல்லும் வழி அறியாது பல மாணவர்கள் இந்தக்கட்டத்தில் பல தீய பழக்கத்திற்கு ஆளாகின்றனர்.அதனால் ஏற்படும் பின் விளைவுகளை பற்றின புரிதல் அவர்களிடத்தில் ஏற்படுவதில்லை.மேலும் எந்த வழியை தேர்ந்தெடுத்து செல்வது என்பதில் அதிக ஐயம் கொள்கிறார்கள்.அதிலும் பல மாணவர்கள் தங்களது நிலை உணர்ந்தும் தன்னிடமுள்ள திறன்களாலும் பகுத்தறிந்து நல்வழியை தேர்ந்தெடுப்பது உண்டு.ஆனால் பலர் மனதளவிலும் மற்றும் உடளவிலும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.போதை பொருட்களை பயன்படுத்துவது,உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள்,மனநல பிரச்னைகள் என பல பிரச்சனைகள் இப்போது உள்ள மாணவர்களிடத்தில் அதிகமாக காணப்படுகிறது.இதனால் படிப்பிலும்,மற்ற விஷயங்களிலும் அவர்களால் கவன செலுத்த முடியாமல் போகிறது இதனால் எதிர் காலம் பாதிப்படையக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.எனவே இம்மாதிரியான பிரச்சனைகள் எந்த சமயங்களில் எவ்வாறு கையாள்வது?இந்த சமயங்களை எவ்வாறு அறிந்துகொள்வது? தவிர்ப்பது எப்படி ?என்பதை பற்றி சிறப்பாக கலந்துரையாடப்பட்டது.

Recent Posts

Leave a Comment