மனச்சிதைவு நோய்க்கான விழிப்புணர்வு வாரம்- மாபெரும் கையெழுத்து இயக்கம் -2019
அறம் மருத்துவமனை சார்பாக,மனச்சிதைவு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு,பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாபெரும் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வை சமுதாய களப்பணியில் ஈடுபட்டு மக்களுக்காக பல தொண்டுகளை செய்து வரும் முன்னாள் காவல்துறை அதிகாரி கவிஞர்.கவிசெல்வா அவர்கள் தொடங்கி வைத்தார்.மேலும் இந்நிகழ்வில் அறம் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் மகேஷ் அவர்களும் கலந்துகொண்டார்.மேலும் பொதுமக்கள் மனச்சிதைவு நோயைப்பற்றிய விழிப்புணர்வு கையேடு கொடுக்கப்பட்டது.பொதுமக்கள் அனைவரும் வைக்கப்பட்டிருந்த பதாகையில் கையெழுத்து இட்டனர்.