Discussions on Psychological disturbances due to Road-accidents and its Coping Strategies

 In NEWS & Events

விபத்து மற்றும் உளவியல் பற்றிய கலந்தாய்வு

அறம் மனநல மருத்துவமனையின் சார்பாக மனநல  மருத்துவர்.மகேஷ் ராஜகோபால் அவர்கள் 20.04.2022 அன்று தமிழ்நாடு போக்குவரத்து கழக ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு வேலையினால் ஏற்படக்கூடிய மன அழுத்தம் குறித்தும், அதை சமாளிக்க கூடிய வழிமுறைகள் குறித்தும் போக்குவரத்துகழக ஊழியர்களிடம்   சிறப்புரையாற்றினார். அப்பொழுது  விபத்தினால் ஏற்படக்கூடிய  விபரீதங்கள்  குறித்து  போக்குவரத்துகழக ஊழியர்களிடம் மருத்துவர் கலந்தாலோசித்தார். அப்பொழுது விபத்தினால்  உளவியல் மாற்றங்கள் மற்றும் மனநல ஆரோக்கியத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளான, அதீத மற்றும் காரணமின்றிய கோவம், கவனச்சிதறல், எரிச்சல் உணர்வு, சோர்வு, உணர்வு நிலை மாற்றங்கள், பயணிகளினால்  ஏற்படுகின்ற சமூக சிக்கல்கள், உடல்நல பிரச்சனைகள், மனநல பிரச்சனைகள்,  குடும்ப பிரச்சனை,  போன்ற இன்னல்கள் குறித்த விரிவான விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் விபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலைகளை தவிர்ப்பதற்கும்,  மன அழுத்தம் ஏற்படும் பொழுது அந்த சூழ்நிலைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை  பற்றிய தெளிவான யுக்தியை மருத்துவர் மகேஷ் ராஜகோபால் அவர்கள்  எடுத்துக்கூறினார். அதாவது  ஆரோக்கியமான மற்றும் கட்டுப்பாடான  உணவு முறை,  ஆழ்ந்த  உறக்கம், தகவல் பரிமாற்றம், பொதுமக்கள் மற்றும் பயணிகளிடம் ஏற்படுத்திக்கொள்ளும் சுமுகமான  அணுகுமுறை,  பணி நேரத்தில் கை பேசியை தவிர்ப்பது போன்ற ஆளுமைத்திறன்களை வளர்த்து கொள்வதன் மூலம்  மனநல ஆரோக்கியம்  மேம்படும் என்றும், வேலையினால் ஏற்படக்கூடிய மனஅழுத்தத்தை தவிர்க்கலாம் என்றும்,  போக்குவரத்தில் ஏற்படக்கூடிய சிறு தவறுகளையும், பெருவிபத்துக்களையும் சரியான முறையில் கையாள முடியும்  என்றும்  ஆலோசனை வழங்கினார்.

 மனஅழுத்தம் மற்றும் மன ஆரோக்கியத்தை குறித்து  மருத்துவர் மேற்கூறிய ஆலோசனைகளை போக்குவரத்து ஊழியர்கள் நன்றாக  மனதில் உள்வாங்கி, போக்குவரத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள், விபத்துக்கள், விபத்தினால் ஏற்பட்ட சிக்கல்கள் போன்றவற்றை  மருத்துவருடன் கலந்தாலோசித்து அவர்களின் கருத்துகளையும்  பகிர்ந்துகொண்டனர் . மேலும் மருத்துவர்  மகேஷ் ராஜகோபால் அவர்கள் ஏற்படுத்திய  விழிப்புணர்வை, அவரவர் தங்களது புரிதலை  சக ஊழியர்களிடம் பகிர்ந்துகொண்டனர்.

Discussions on Psychological disturbances due to Road-accidents and its Coping Strategies

Dr.Mahesh Rajagopal, On behalf of Aram Psychiatric Hospital, had given a speech on Stress Management for the Drivers of Tamilnadu Transport Corporation. This program was held on 20.4.2022 at Tamilnadu Transport Corporation Office, in which around 25 drivers of Tamilnadu Transport Corporation Office participated. On this topic. Dr.Mahesh Rajagopal had discussed on how one can cope up with stress due to work pressure and how to manage work-life balance. In addition, the speaker had also talked about how accidents happen and the consequences of accidents and how that affects mental and emotional health. Having given the outline of road accidents, the speaker moved to the topic of how that significantly affects one’s living functions. For example: the sufferer might psychologically experience excessive anger, lack of focus, irritation, and emotional ups and downs. These psychological disturbances might lead to physical issues as well like cardiac issues due to chronic stress, muscle ache, excessive heaviness and so on. Being suffered with this stress, they also find difficulties in dealing with family stuff and might end up failing in resolving issues happening in their family. Those factors lead to disruption in routine life and poor work-life balance. The speaker had also shared some tips to keep the mind relaxed, avoid the situations for Road Accidents and coping strategies for dealing with mental stress due to road accidents. In order to be mentally healthy and to lead a normal peaceful life and work, life style modification is much more essential , such as, healthy food habits, professional communication between driver and passenger, sleep hygiene, spending quality time with the individual, creating new hobbies at leisure time and meditation, Dr.Mahesh suggested to modify one’s life healthy.
After covering all the aspects of physical, mental and emotional health, Dr.Mahesh encouraged the audience to share their worst and best experience at work. The participants eagerly indulged in the interaction session in which they gave their view points at work that they would be facing challenges each day.

Recent Posts

Leave a Comment