TREATMENT FOR DEPRESSION
மருந்துகள்:
SSRI Antidepressant மாத்திரைகளான Fluoxetine, Paroxetine , Escitalopram, Sertraline போன்ற மாத்திரைகளை முதலில் பரிந்துரைக்க வேண்டும். மாத்திரைகளில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு குறைந்தது இரண்டு வாரங்கள் முதல் மூன்று வாரங்கள் ஆகும். ஒரு மாத்திரையை முயற்சி செய்தும் அதன் அளவை முடிந்த வரை உயர்த்தியும் நல்ல முன்னேற்றம் ஏற்படவில்லையென்றால் அடுத்த SSRI மாத்திரைகளில் ஏதேனும் ஒன்றை கொடுக்க வேண்டும். இரண்டு SSRI மாத்திரைகளை முயற்சி செய்தும் நல்ல முன்னேற்றம் ஏற்படவில்லையென்றால் SSRI மாத்திரைகளை நிறுத்தி விட்டு Mirtazepine அல்லது SNRI மாத்திரைகளான Venlaflaxine அல்லது Duloxetine கொடுக்க வேண்டும். SNRI மாத்திரைகளால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் என்பதால் அவ்வப்பொழுது BP யை தொடர்ந்து கண்காணித்திட வேண்டும். இருதய கோளாறு உள்ளவர்களுக்கு SNRI மாத்திரைகளை தவிர்ப்பது நல்லது. மாத்திரைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டால் Antidepressant மாத்திரைகளை தொடர்ந்து ஆறு முதல் ஒன்பது மாதங்கள் வரை முழு அளவில் கொடுத்து, பின்பு படிப்படியாக நிறுத்த வேண்டும். மனசோர்வு நோய் இரண்டு முறைக்கு மேல் மீண்டும் மீண்டும் ஏற்பட்டாலோ, குறைந்தது இரண்டு வருடங்களுக்கு மேலாக இந்நோயின் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டிருந்தாலோ, சிகிச்சையின் மூலம் முழுமையான முன்னேற்றம் ஏற்படாமல் இருந்தாலோ மாத்திரைகளை இரண்டு வருடங்களுக்கு மேலாக தொடர வேண்டும். அவ்வாறு தொடரும் போது மாத்திரையின் அளவை முடிந்த வரை குறைத்து வைத்து கொள்ள வேண்டும்.
ஒரு மாத்திரையில் நல்ல முன்னேற்றம் ஏற்படவில்லையென்றால் இரண்டு Antidepressant மாத்திரைகளை சேர்த்து கொடுக்க வேண்டும். இரண்டு மாத்திரைகளை சேர்த்து கொடுத்தும் முன்னேற்றம் ஏற்படவில்லையென்றால் Lithium அல்லது Thyroxine மாத்திரைகளை சேர்த்திட வேண்டும். Psychosis அறிகுறிகள் ஏற்பட்டால், Antipsychotic மாத்திரைகளை கொடுக்க வேண்டும்.
ECT :
மனசோர்வு நோயின் அறிகுறிகள் தீவிரமடைந்து, தற்கொலை எண்ணம்
ஏற்பட்டிருந்தாலோ, Psychosis அறிகுறிகள் ஏற்பட்டிருந்தாலோ, தீவிரமாக உணவை
தவிர்த்து வந்தாலோ, பேச முடியாமல் அசைவின்றி காணப்பட்டாலோ மற்றும்
மாத்திரைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படாமல் இருந்தாலோ ECT கொடுக்க வேண்டும். ECT
கொடுக்கும் போது வாரத்திற்கு இரு முறை ஆறு முதல் எட்டு ECT கொடுக்க வேண்டும். ECT
பொதுவாக பாதுகாப்பான சிகிச்சை முறையாக மட்டுமல்லாமல், உயிர் காக்கும்
சிகிச்சையாகவும், உடனடி சிகிச்சையாகவும் பார்க்கப்படுகிறது.
Psychotherapy / Counselling:
மனசோர்வினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகளுடன் கூடிய உளவியல்
சிகிச்சையும் ஆலோசனையும் கொடுப்பதன் மூலம் அவர்களின் அறிகுறிகளின்
பாதிப்புகளிலிருந்து வெளிக்கொணர முடியும்.
Cognitive Behaviour Therapy:
இந்நோயினால் பாதிக்கப்பட்டவரின் எதிர்மறை
எண்ணங்களையும் செயல்பாடுகளையும் மாற்றி அமைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.
Cognitive Behaviour Therapy யின் மூலம் மனசோர்வை உணடாக்கும் எதிர்மறை
எண்ணங்களான, தன்னம்பிக்கையின்மை, தன்னால் எதுவும் செய்ய முடியாது, தனக்கு
யாருமே இல்லை என்பது போன்ற மனப்பான்மைகளை மாற்றியமைக்க இந்த உளவியல்
சிகிச்சை உதவுகிறது மற்றும் Behaviour Therapy யின் மூலம் வாழ்க்கைத்திறன் மற்றும்
சமூக திறன் போன்ற பயிற்சிகளும் வழங்கப்படுகிறது.
Interpersonal Therapy மனசோர்வினால் பாதிக்கப்பட்டோரின் வாழ்க்கையில் இருக்கும்
பிரச்சனைகளை பற்றியும் தங்கள் நிலையை பற்றியும் புரிந்து கொள்வதற்கும் உதவுகிறது.
Family Therapy மனசோர்வினால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு இந்நோயை
பற்றியும் நோயாளின் நிலையை பற்றியும் விளக்குவதற்கும், இந்நோயினால் குடும்ப
உறவுகளில் ஏற்பட்ட பிரச்சன்னைகள் மற்றும் சிக்கல்களை சரி செய்வதற்கும்
பயன்படுத்தப்படுகிறது.