சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம், ஜூன் 26

 In NEWS, NEWS & Events

உலகம் முழுவதிலும் 40 கோடி பேர் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி உள்ளதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதில் இந்தியாவில் 1 கோடி முதல் 4 கோடி வரை போதைப்பொருளுக்கு அடிமையனவர்கள் உள்ளனர். நமது நாட்டில் நாளுக்கு நாள் போதை பொருட்களின் பயன்பாடு இளம்பருவத்தினரிடம் அதிகரித்துக்கொண்டே உள்ளது. இளம்பருவத்தினர் தற்காலிகமாக ஏற்படும் போதைக்காகவும்,மேலும் பொழுதுபோக்கிற்காகவும் பயன்படுத்த ஆரம்பிக்கிறார்கள். ஆனால் அதனுடைய பின்விளைவுகள் பற்றின புரிதல் அவர்களிடத்தில் காணப்படுவதில்லை .பெரும்பாலும் 17-25 வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகளவில் போதைப்பொருட்களை உபயோகம் செய்கிறார்கள். இதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வில் போதை பொருட்கள் பயன்படுத்துவதில் திருச்சி மாநகரம் மூன்றாவது இடத்தில் உள்ளது.பள்ளி மாணவர்கள் அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். திருச்சியில் கஞ்சா,நறுமண தரும் பசைகள்,பெட்ரோல்,ஊசிகள் மூலம் மருந்துகளை ஏற்றுக்கொள்வது,கூல் லிப்,ஹான்ஸ் போன்ற பல போதைப்பொருட்கள் வலம் வருகின்றன.இதனால் பலபேர் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். ஆண்டு தோறும் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பேரின் உயிரை போதைப் பழக்கம் பறிக்கிறது. போதை பழக்கத்தால் உலகம் முழுவதும் குற்றங்கள், விபத்துகள், கலாசார சீரழிவுகள் அதிகரித்துவிட்டன. இது ஒரு நாட்டின் வளர்ச்சியையும் கவுரவத்தையும் பாதிக்கும் அளவுக்கு கொடிய வடிவம் எடுத்துள்ளது. நாடுகளின் பொருளாதார வளர்ச்சியையும் கடுமையாக பாதித்துள்ளது. தன்னையும் அழித்துக்கொண்டு, சமூகத்திற்கும் தீங்கு விளைவிப்பவர்கள்தான் போதைப் பொருள் உபயோகிப்பவர்கள். இதனால் கடைபிடிப்பது இன்றியமையாததாக உள்ளது.

Recent Posts

Leave a Comment

Online-class-AramhospitalPsychiatry counseling