இணையவழி கல்வியின் சாதகம் மற்றும் பாதகங்கள்

 In Blog, NEWS, NEWS & Events, Uncategorized

Online வகுப்புகள் எனப்படும் புதிய Digital கல்வி முறை தற்போது covid-19 ஊரடங்கு காரணமாக தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் ஏற்படும் சாதகங்கள் மற்றும் பாதகங்கள் என்ன?, உளவியல் ரீதியான சிக்கல்கள் என்ன?, அதை நாம் எவ்வாறு எதிர்கொள்வது என்பதை பற்றி பார்க்க இருக்கிறோம். இதைப்பற்றி நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் பள்ளிக்கு சென்று மட்டுமே படித்து கொண்டிருந்த மாணவர்களுக்கு, இது எப்படி இருக்கிறது. அவர்களுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு எப்படி இருக்கிறது? மற்றும் இதை பெற்றோர்கள் எப்படி பார்க்கிறார்கள்? என்ற பல்வேறு மாறுபட்ட கண்ணோட்டங்களில் இதை நாம் அணுக வேண்டி உள்ளது. நமக்கு இந்த Online வகுப்புகள் புதுமையானதாகவும், வித்தியாசமான அனுபவமாக இருப்பதால் இதில் பல சிக்கல்கள் ஏற்படுகிறது.

முதலில் நன்மைகள் என்று எடுத்து கொண்டால் யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் இந்த digital கல்வி முறையை பயில முடியும். உதாரணமாக. வெளிநாடுகளுக்கு சென்று படிக்க வேண்டும் என்ற நிலை மாறி தற்போது அவரவர் இருக்கும் இடத்தில் இருந்து பல வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் Online வகுப்புகள், பயிற்சிகளினை பங்கு பெற முடியும். மற்றும் பள்ளி பாடங்களுடன் இணைந்து பலருக்கும் விருப்பமான பல்வேறு துறைகளினை பற்றி கற்றுக்கொள்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. இணையதள வகுப்புகள் ஒருசில செயல்முறைகளினை எளிமையாக்குகிறது. அதாவது ஒரு மாணவர் பள்ளி சென்று படிக்க வேண்டும் என்று எடுத்துக்கொண்டால் அவருக்கு ஆகும் நேரம், பொருள், செலவை விட online வகுப்புகளுக்கு செலவிடும் நேரம், பொருள் செலவு குறைவாகவே உள்ளது.
பள்ளி சென்று தான் கல்வி கற்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து விடுபட்டு பல வாய்ப்புகளினை இணையவழி கல்வி அமைத்து தருகிறது. உதாரணமாக. தற்போதுள்ள இயற்கை பேரிடர் போன்ற காலகட்டங்களில் கல்வி என்பது தடைபடாமல் இருப்பதற்கு வழி வகை செய்கிறது. மாணவர்களுக்கு பள்ளி படிப்பினை தாண்டி அவர்களுக்கு பிடித்தமான பல செயல்களை செய்வதற்கு நேரமும், வாய்ப்பும் கிடைக்கிறது. சில மாணவர்களுக்கு பள்ளி செல்வது என்பது பயமாகவும், தயக்கமாகவும் போன்ற உளவியல் பாதிப்புகள் இருப்பதை காணலாம். அவர்களுக்கு இதுபோன்ற கல்வி முறை சௌகரியமாக இருக்கக்கூடும்.

தற்போது அனைத்தும் இணையதள மூலம் செயல்பட தொடங்கி உள்ளது என்பதால் இந்த இணையவழி தொழில்நுட்பம் பற்றிய திறன் அனுபவத்தை வளர்த்துக்கொள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இது உதவுகிறது.

இந்த Online கல்வி முறை என்பது நமக்கு தற்போது தான் அறிமுகமாகி உள்ளது என்பதாலும் இதன் பயன்களை இன்னும் முழுமையாக அனுமதிக்காத நிலையில் இதன் பாதகங்கள் சற்று அதிகமாகவே தற்போது காணப்படுகின்றது அதற்க்கு முக்கியகாரணம் இணையவழி வகுப்புகள் அணைந்து மாணவர்களையும் சென்றடைவதில் சில தடைகள், மற்றும் சிக்கல்கள் உள்ளது.

பள்ளிகளுக்கு சென்று கல்வி கற்கும்போது தான் மாணவர்களுக்கு சுயஒழுக்கம், நேர நிர்வாகம், சமூகத்திறன் போன்றவை கிடைக்கும் என்பது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வாதமாக உள்ளது.இந்த கருத்தையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது முக்கியமான ஒன்றுதான் ஏனெனில் பள்ளிக்கு சென்று கல்வி கற்கும்போது உடன் படிக்கும் மாணவர்களின் நட்புறவு போன்றவை அவர்களின் சமூகத்திறனை வளர்க்கஉதவுகின்றது, அதேபோல கவனச்சிதறல், இடையூறுகள் என்பது online வகுப்புகளினை ஒப்பிடும்போது பள்ளி வகுப்புகளில் இவைகள் மிக குறைவு, மற்றும் இணையவழி கல்வி என்பது அனைத்து மாணவர்களுக்கு புரியும் வகையில் உள்ளதா, அவர்களின் சந்தேகங்கள் தீர்க்கப்படுகின்றதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதேபள்ளி வகுப்பு என்றால் மாணவர்களின் புரிதலுக்குஏற்ற வகையில் ஆசிரியர்கள் பாடங்களினை திரும்ப நடத்துவதற்கும், சந்தேகங்களினை ஆசிரியர் மற்றும் உடன் படிக்கும் நண்பர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுவதற்கு நல்ல வாய்ப்பினை வழங்குகிறது.

இணைய தளம் அதிக நேரம் பயன்படுத்துவதால் சில சமயம் சிறுவர்கள், பதின் பருவ மாணவர்கள் தவறான வழிகளில் பயன்படுத்துவதற்கும், இணையதளத்திற்கு அடிமையாக்குவதற்கும் இது ஒரு காரணமாக உள்ளது. எனவே இதை கண்காணிக்கும் பொறுப்பு பெற்றோரிடம் தான் உள்ளது. ஆனால் சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கண்காணிக்கிறேன் என்ற பெயரில் அவர்களுடன் அமர்ந்து Online வகுப்புகளிலும் சிலர் பங்கேற்கின்றனர். இது குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையூறாக இருக்கும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். Online வகுப்புகள் நடக்கும் போது போதுமான சுதந்திரத்தை கொடுப்பது சௌகரியமாக இருக்கும்.

மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இந்த Online வகுப்புக்கான முறையான திட்டமிடுதல், அட்டவணைகள் போன்றவற்றில் குறைபாடுகள் காணப்படுகிறது.மற்றும் சிறுவர்களுக்கும், சில ஆசிரியர் மற்றும் பெற்றோர்களுக்கும் இந்த இணையவழி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் அனுபவமின்மையும், சில சிக்கல்களும் உள்ளது. இது அனைவர்க்கும் சில சமயங்களில் மன உளைச்சலை ஏற்படுத்தலாம்.

இந்த Digital கல்வி முறை என்பது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சில பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதாவது அதிக நேரம் கணினி மற்றும் கைபேசி திரைகளை பார்த்துக்கொண்டே இருப்பதால் கண் குறைபாடுகளும், ஒரே இடத்தில அதிக நேரம் அமர்ந்து இருப்பதால் குறைந்த உடல் செயல்பாடுகள் காணப்படுகிறது. அதேபோல் உளவியல் ரீதியாக அதிக நேரம், கணினி மற்றும் கைபேசி பயன்படுத்துவதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி திறன் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு கவனச்சிதறல், தூக்கமின்மை, படைப்பாற்றல் குறைவு, கற்பனைத்திறன் குறைவு மற்றும் பதட்டம், பயம், மனஅழுத்தம் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

மாணவர்களின் கவனிக்கும் திறன் மற்றும் கற்றல் திறன் போன்றவற்றில் இந்த இணையதள கல்வி பாதிப்புகளையும், மாற்றங்களையும் ஏற்படுத்துகிறது. அதாவது மாணவர்களுக்கு Active Listening என்பது குறைந்து Passive Listening என்ற நிலைக்கு செல்கின்றனர். இது அவர்கள் கற்றல் திறனுக்கு தடையாக உள்ளது.

பள்ளி, கல்வி, தேர்வு மீது பயம், பதட்டம் உள்ள மாணவர்களுக்கு இந்த புதிய கல்வி முறையானது அவர்களின் அச்சத்தை அதிகரிக்கிறது. இதனால் இவர்களுடைய படிப்பின் மீதுள்ள ஆர்வம் குறைதல், தன்னம்பிக்கையின்மை, போன்றவை பாதிக்கப்படுகிறது. வெகு நாட்களாக சமூக பங்களிப்பு இல்லாமல் ஒரே அறையில் அமர்ந்திருப்பது நண்பர்கள், ஆசிரியர்கள் ஒருவரை ஒருவர் நேரடியாக சந்தித்து பேசுவதற்கான வாய்ப்பு இல்லாததால் தனிமை உணர்வு, எரிச்சல் உணர்வு, சுய உந்துதல் நாளடைவில் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

இதை எவ்வாறு திறன்பட எதிர்கொள்வது?
கல்வி என்பது ஒரு மனிதனின் அறிவுத்திறனை வளர்க்க உதவுவது. இதை நாம் பள்ளி, கல்வி, பாடப்புத்தகங்கள் மூலமாக மட்டுமே கிடைத்து விடாது. எனவே நாம் அறிவை விரிவு செய்வதற்கு பல முயற்சிகளில் ஈடுபட வேண்டும். இதற்காக நாம் புத்தகங்கள் வாசிப்பது என்பதை கடைபிடிக்க வேண்டும். அதாவது பள்ளி புத்தகங்களினை தவிர மற்ற புத்தகங்கள் படிப்பதன் மூலமும், தானாக கற்றுக்கொள்வதன் மூலமாகவும் நம் அறிவினை வளர்த்துக்கொள்ள முடியும். இதற்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

பெற்றோர்கள் Online வகுப்புகளினை மட்டும் தன் பிள்ளைகளை கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் தாண்டி வீட்டிலுள்ள பல வேலைகளை செய்வதற்கும் பழக்கபடுத்த வேண்டும்.

தொடர்ந்து Online வகுப்புகளை கவனிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க ஒவ்வொரு முப்பது நிமிடத்திற்கும் ஒருமுறை 5நிமிட இடைவேளை எடுப்பது நல்ல பலன் தரும். இந்த Online வகுப்புகளை பற்றின புரிதல் குறைவாக இருக்கும் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அதைப்பற்றின புரிதலே ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு இடையில் தெளிவான தகவல் பரிமாற்ற திறனை அதிகரித்து கொள்ள வேண்டும். இதன்மூலம் மாணவர்களை கண்காணிப்பதற்கும், வழிநடத்துவதற்கும் உதவியாக இருக்கும்.
மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் எளிமையாக புரியும் வகையிலும் வகுப்புகள் அமைய வேண்டும். இது தொடக்க கல்வி பயிலும் மாணவர்களுக்கு, இந்த வகுப்பின் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.
இது முன்னர் சொன்னது போல் புதுமையான அனுபவம் என்பதால் மாணவர்களுக்கு இதன்மீது அச்சமும், ஆர்வமின்மையும் ஏற்படுவதற்கு சாத்திய கூறுகள் உள்ளது. அதைக்கண்டறிந்து அதன் பங்களிப்பை பெற வேண்டும். இதற்கு இந்த வகுப்புகள் ஒருவரின் தகவல் பரிமாற்றமாக இருப்பதை விட அவ்வப்போது கலந்துரையாடல்கள் போல கொண்டு செல்லலாம். இதன் மூலம் மாணவர்களிடையே ஏற்படும் சந்தேகத்தினை போக்குவதற்கும், அவர்களின் பங்களிப்பு எவ்வாறு உள்ளது என்பதை கண்டறிந்து கொள்ள முடியும்.

இந்த Online வகுப்புகளை Video வடிவில் மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் புரியாதவற்றினை திரும்ப பார்த்து புரிந்துகொள்ளவும், கிடைக்கும் நேரத்தில் பார்ப்பதற்கும் உதவும்.

Recent Posts

Leave a Comment