SUICIDE PREVENTION DAY RALLY – 10 SEPTEMBER 2018

 In NEWS & Events

தற்கொலை தடுப்பு தினத்தினை முன்னிட்டு அறம் மனநல மருத்துவமனை சார்பாக மாபெரும் விழிப்புணர்வு பேரணி பிஷப் ஹீபர் கல்லூரியுடன் இணைந்து நடத்தப்பட்டது.பேரணியை காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.சிகாமணி கண்டோன்மெண்ட் அவர்கள் கொடியசைத்து துவங்கி வைத்தார் அவர்களுடன் அறம் மனநல மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மற்றும் மனநல மருத்துவர் மரு.மகேஷ் ராஜகோபால்,தற்கொலை தடுப்பு சங்கத்தின் பொறுப்பாளர் பேராசிரியர் திருமதி ரீனா,நல்லசமாரியன் சங்கத்தின் பொறுப்பாளர் ஆகியோர்களும் கலந்துகொண்டனர். பிஷப் ஹீபர் கல்லூரியின் மாணவ சங்கங்கள் தற்கொலை தடுப்பு சங்கம்,நல்ல சமாரியன் சங்கம்,போதை பொருள் தடுப்பு சங்கம்,மனித உரிமை சங்கம் ஆகியோர்கள் கலந்து கொண்டனர் .பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருந்து பிஷப் ஹீபர் கல்லூரி வரை நடத்தபட்டது.இப்பேரணியில் 800 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர்.பின்பு பிஷப் ஹீபர் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.அந்நிகழ்ச்சியில் மருத்துவர்.மகேஷ் ராஜகோபால் அவர்கள் மாணவர்களிடத்தில் விழிப்புணர்வு உரை ஆற்றினார்.அவ்வுரையில் மாணவர்களிடத்தில் தற்கொலை எண்ணங்கள் ஏற்படுவதற்க்கான காரணங்கள் அவற்றை எவ்வாறு கையளவேண்டும்.மேலும் பல கருத்துக்களை மாணவர்களின் முன்னிலையில் எடுத்துரைத்தார்.

Recent Posts

Leave a Comment