Adolescent Mental Health awareness program by Aram

 In Blog

Aram Psychiatry Hospital, Trichy along with Bishop Heber College students conducted awareness program among Deeksha child care centre. Adolescent people undergo number of psychological problems like anxiety depression emotional disturbances anger management issues relationship problems and drug and alcohol  problems. Some people also undergo problems due to increasing use of mobile phone. 

Number of skills like problem solving skills, anger management skill, emotional handling, emotional intelligence, and relationships management were taught to children.

தீக்க்ஷா குழந்தைகள் காப்பகத்தின் நிர்வாக இயக்குனர் திரு. ஐசாக் அருளப்பன் மற்றும் நிர்வாக மேற்பார்வையாளர் திருமதி. ஆரோக்கிய இசபெல்லா அவர்களின் தலைமையில், மலையப்பட்டி அரசு மேல்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. அகஸ்டின் லூர்து பால்ராஜ் அவர்களின் முன்னிலையில் பிஷப் கல்லூரியின் சமூக பணித்துறை மாணவர் திரு. கோமதி சங்கர் அவர்கள் பருவ வயதை எவ்வாறு கையாள்வது என்ற நிகழ்ச்சியை அக்டோபர் 14- ஆம் தேதி அன்று வியாழக்கிழமை மலையப்பட்டி அரசு மேல்நிலை பள்ளி 9 மற்றும் 10 – ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு அறம் மனநல மருத்துவமனையின் சார்பாக மனநல ஆலோசகர் செல்வி. ஜ. ரதிப்பிரியா அவர்கள் சிறப்புரையாற்றினார். இதில் பருவ வயதில் ஏற்படும் உடல் மற்றும் உணர்வு ரீதியாக ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் இதனை கையாளும் விதங்கள் குறித்தும் பேசப்பட்டது. அதிலும் குறிப்பாக பருவ வயதில் ஏற்படும் குண கோளாறுகள், உணர்வு நிலை மாற்றங்கள்,எதிர்மறை சிந்தனைகள், தனிமை உணர்வு, எதிர் பாலினத்தினரின் மீதான ஈர்ப்பு, பின் விளைவுகள் குறித்து சிந்திக்காமல் செய்யும் செயல்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியரின் கருத்துக்கு எதிர்மாறாக செயல்படுவதனால் ஏற்படும் விபரீதங்கள், அதீத கை பேசி பயன்பாட்டினால் ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகள் போன்ற பல விஷயங்கள் குறித்து மாணவர்களுடன் கலந்து பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் மாணவர்களும் ஆர்வமுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களது பல சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டு தெளிவு பெற்றனர்.

Aram awareness program
Recent Posts

Leave a Comment