Mental health awareness program among students

 In Uncategorized

கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் “வளர் இளம் பெண்களுக்கான ஆரோக்கியம்” என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் அறம் மனநல மருத்துவமனையில் மனநல ஆலோசகர் திரு. மனோஜ் அவர்கள் கலந்துகொண்டு மனநலம் பற்றி கலந்துரையாடினர்.இந்த கருத்தரங்கில் வளர் இளம் பெண்களுக்கு ஏற்படும் மனநல பிரச்சனைகள் பற்றியும், மனநல பிரச்சனைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பதற்கான ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த கருத்தரங்கில் கலந்தாலோசிக்கப்பட்ட கருத்துக்களின் சுருக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆரோக்கியம் என்பது எந்த ஒரு நோயும் இல்லாமல் இருப்பது மட்டும் ஆரோக்கியம் என்பது ஒருவர் உடலளவிலும், மனதளவிலும் மற்றும் சமூக உறவுகளிலும் எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் தினசரி வாழ்க்கையில் திறன்பட செயல்படுவதை ஆரோக்கியம் என உலக சுகாதார நிறுவனம் கூறுகின்றது. ஆனால் நாம் பெரும்பாலும் உடல் நல குறைபாடுகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம், மனநல பிரச்சினைகளுக்கு கொடுக்கப்படுவதில்லை, காரணம் மனநல பிரச்சனைகளை பற்றிய புரிதலும், மன நோய்கள் பற்றிய விழிப்புணர்வும் குறைவாக இருப்பதே இதற்கான காரணமாக உள்ளது. எனவேதான் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நமக்கு தேவையான ஒன்றாக உள்ளது. பொதுவாக 14 முதல் 18 வயது வரை உள்ள காலகட்டத்தில் பல நபர்களுக்கு மனநல பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதாவது மனச்சிதைவு நோய், மன அழுத்தம், மனச்சோர்வு, மனப்பதட்டம், எண்ண சுழற்சி நோய் போன்ற மனநல பதிப்பு முதல் முதலில் 14 முதல் 18 வயது உடைய வளர் இளம் பருவத்திலேயே பெரும்பாலும் வெளிப்படுகின்றது. எனவே அந்த நோய்களைப் பற்றின புரிதலும், நோய்களினால் ஏற்படும் மனநல அறிகுறிகளை பற்றின புரிதலும் இருக்கும் பட்சத்தில் மன நோய்களை ஆரம்ப நிலையில் கண்டறிந்து அதற்கு முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டு மனநல பாதிப்பிலிருந்து மீண்டு இயல்பான வாழ்கை வாழ முடியும் என்பதற்கான ஆலோசனை வழங்கப்பட்டது.

மேலும் இத்துடன் பதின் பருவத்தில் ஏற்படும் உளவியல் பாதிப்புகளான பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது. அதாவது அதிக உணர்ச்சிவசப்படுவது, நினைத்ததை உடனே செய்ய வேண்டும் என்ற எண்ணம், ஆபத்தை விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவது, தாழ்வு மனப்பான்மை, குறைந்த சுயமதிப்பீடு, எதிர்மறை எண்ணங்கள், தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வது மற்றும் தற்கொலை எண்ணங்கள் போன்ற பாதிப்புகளும் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இது போன்ற உளவியல் பிரச்சனைகளை எவ்வாறு கண்டறிந்து சரி செய்ய முடியும் என்பதற்கான ஆலோசனையும் வழங்கப்பட்டது. மேலும் திறன் மேம்பாடு சார்ந்த புத்தகங்கள், மனநலம் சார்ந்த புத்தகங்கள் படிப்பது மற்றும் மனநலம் சார்ந்த விழிப்புணர்வு காணொளிகள் பார்ப்பது போன்றவைகள் மூலம் உளவியல் மற்றும் மனநலம் பற்றின புரிதலும் அதை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளையும் கற்றுக் கொள்ள முடியும். இத்துடன் மனநல பாதிப்பு தீவிரமாக இருக்கும் பட்சத்தில் மனநல மருத்துவர் அல்லது மனநல ஆலோசகரை சந்தித்து அதற்கான ஆலோசனையை பெற்றுக் கொள்ளவும் வலியுறுத்தப்பட்டது.

Aram Psychiatry team from Trichy involved in awareness program among young adults and college students from Kongu Engineering college. Mr. Manoj, Social worker from Aram hospital taught the students about what the mental health is, and nature and type of mental illnesses. Aram hospital is a leading psychiatric hospital which caters the need of people with various mental illnesses.

Recent Posts
Comments

Leave a Comment