Rehabilitation for Mentallyill – மனநல பிணியாளர்களுக்கான மறுவாழ்வு
நீண்ட நாள் மனநோய்
மனநோயை உடனடியாக கண்டுபிடித்து தகுந்த சிகிச்சையளித்து, தக்க பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கி தீர்வு காணாவிட்டால், மனநோய் “நீண்டநாள் மனநோயாக” மாறுவதற்கு வாய்ப்புள்ளது. நீண்டநாள் மனநோயாக மாறினால் வாழ்க்கையில் பல்வேறு மாறுதல்கள் ஏற்படும். உதாரணத்திற்கு வேலையில் ஈடுபாடின்மை, நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து விலகியிருத்தல், அன்றாட வேலைகளை சரிவர கவனிக்க இயலாமை போன்ற மாறுதல்கள் ஏற்படும். இவ்வாறு நீண்டநாள் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள், சோம்பேறிகள் போல் சுற்றித்திரிவதோடு, தன்னுடைய சிறிய அன்றாட வேலைகளுக்கு கூட மற்றவர்களை சார்ந்தவர்களாக மாற நேரிடும்.
எவ்வளவு படித்த அறிவாளிகளாக இருந்திருந்தால் கூட மனநோயை தக்க முறையில் சிகிச்சை அளிக்காவிட்டால், படித்ததினால் பயனற்றவர்களாகவே தென்படுவார்கள். செல்வம் படைத்திருந்த நபர்களால், அந்த செல்வதை கட்டிக் காப்பதும், அந்த செல்வதை திட்டமிட்டு செலவு செய்யவும் இயலாதவர்களாக இருப்பார்கள். மனைவி மற்றும் குடும்பத்தை சரிவர பராமரிக்க முடியாமல் போய் சில நேரங்களில், கணவன் மனைவி உறவுகள் முறிந்து போவதும் உண்டு. சில நேரங்களில் காரணம் இன்றி செய்கின்ற அலுவலக வேலைகளில் கவனம் செலுத்த முடியாமல் போய் அந்த வேலையை விட்டு விலக நேரிடும். ஆகையால், மனநோயாளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரிவர சிகிச்சை அளிக்காவிட்டால் வாழ்க்கையே தலைகீழாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது. மனசிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பலநேரங்களில் சிகிச்சை பலனின்றி வாழக்கையில் தனித்து இயங்க முடியாத நிலை ஏற்படும். எந்த ஒரு காரியத்தை புதுமையாக செய்ய வேண்டும் என்றாலும் தன்முனைப்போடும் தன்னம்பிக்கையோடும் செய்ய இயலாமல் போய்விடும். இதனால் நாளடைவில் தங்களின் மனஉளைச்சளை சரி செய்வதற்கு தாங்களாகவே தீர்வு காண கஞ்சா, புகை மற்றும் ஆல்கஹால் போன்ற போதை பொருட்களுக்கு அடிமையாகி விடுவதும் உண்டு.
ஆகையால், இப்படிப்பட்ட சிக்கலான மனநிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு REHABILITATION எனப்படும் மறுவாழ்வு மையத்தின் உதவிகள் தேவைப்படுகிறது. இதில் என்னென்ன பயிற்சிகள் தேவைப்படும் என ஆராய்ந்த பின், நோயாளிகளின் திறனுக்கு ஏற்றவாறு சிறிது சிறிதாக பல பயிற்சிகள் அளித்து மீண்டும் தகுந்த வேலை வாய்ப்பினை ஏற்படுத்துவதன் மூலம் மீண்டும் வாழ்வில் ஒளி விளக்கேற்றமுடியும். ஆல்கஹால் பிரச்சனைகளுக்கான சிகிச்சை, மனநலத்திற்கான மருந்தை உட்கொள்வதின் முக்கியத்துவத்தை உணர்த்துதல், தன் உடலை பேணுதல், பணத்தை கையாளும் திறனை வளர்த்தல், தொழில்பயிற்ச்சி அளித்தல் போன்ற பயிற்சிகளினால் நோயாளிகள் பெரிதும் பயன் பெறுவார்கள். இதுமட்டுமின்றி குடும்ப உறுப்பினர்களுக்கு நோயை பற்றிய புரிதலை ஏற்படுத்துவதை மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. நோயாளிகளின் சில செயல்பாடுகள் இயல்புக்கு மாறாக இருந்தால் அந்த தேவையற்ற செயல்பாடுகளை மெல்ல களைவதில் கவனம் செலுத்தி மாற்றுதல் வேண்டும்.
எங்கள் அறம் மனநல மருத்துவமனையில் நீண்டநாள் நோயாளிகளை பேணுவதற்கும், தக்க பயிற்சி அளிப்பதற்கும், அனுபவம் மிக்க செவிலியர்களோடு நல்ல முறையில் அமைக்கப்பட்டுள்ளது